Pages

Saturday, May 6, 2017

ஓமனில் சட்ட விரோத குடியேறிகள் பிரச்சனை!

அதிரை நியூஸ்: மே-06
ஓமன் நாட்டிற்குள் பல்வேறு முனைகளிலிருந்தும் பல நாட்டவர்களும் சட்ட விரோதமாக உள்நுழைந்து வருவது சட்ட விரோத குடியேற்றவாசிகளும் சரி ஓமன் அரசுக்கும் சரி பரஸ்பர தலைவலியாகவே இருந்து வருகிறது. சட்ட விரோதமாக உள்நுழைபவர்களால் போதியளவு வருமானம் ஈட்ட முடியாமலும், போதிய மருத்துவ வசதிகளோ, இருப்பிடங்களோ, உணவோ கிடைக்காமலும் அல்லாடி வருகின்றனர். இன்னொரு புறம் ஓமன் அரசிற்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் போதை பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவோராகவும் பலவகையான நோயை பரப்புகின்றவர்களாவும் அமைகின்றனர் இச்சட்ட விரோத குடியேறிகள்.

பொதுவாக பதீனா கவர்னரேட்டின் வடக்கு மற்றும் தென்புற கடல்வழியாகவும், ஏமன் மற்றும் சோமாலியர்கள் தோபார் கவர்னரேட்டில் அமைந்துள்ள மலைப்பிரதேசங்கள் வழியாக தெற்கு பகுதி ஓமனுக்கு உள்ளும், ஈரானியர்கள் முஸன்தம் பகுதியில் அமைந்துள்ள கஸ்ஸாப் மாகாணத்திலிருந்து 50 கி.மீ தூரமேயுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகவும் உள்நுழைகின்றனர் என ராயல் ஓமன் போலீஸ் தெரிவித்துள்ளது. சட்ட விரோத குடியேறிகள் பட்டியலில் பாகிஸ்தான், ஈரான், ஓமனுடன் இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்,சோமாலியா நாட்டினரும் அடக்கம்.

கடந்த வருடம் சட்ட விரோதமாக அழைத்து வரப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த அஹமது ரஷீத் என்பவர் கூறும் போது, கடத்தல்காரர்கள் இவரையும் இன்னும் 8 பேரையும் முதலில் ஈரானுக்குள் அழைத்து வந்துள்ளனர். அங்கிருந்து ஒரு படகில் இருள் சூழ்ந்த கேபினுக்குள் அடைத்து கொண்டு வந்துள்ளளனர், இந்த சூழலால் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த இருவரை வரும் வழியில் கடலில் வீசியெறிந்து விட்டும் வந்துள்ளனர். அப்படி வந்தவரை 2 வாரங்கள் ஷினாஸ் மாகாணத்திலுள்ள விவசாய பண்ணைகளில் மறைத்து வைத்திருந்து பின்பு தலைநகர் மஸ்கட்டிற்கு வேறு வேலையை தேடிக்கொள்ளும் படி அனுப்பி வைத்துள்ளனர்.

மஸ்கட்டில் அஹமது ரஷீதை போலவே சட்டவிரோத குடியேறிகளாகவுள்ள பலநூறு பேருடன் தினமும் போட்டியிட்டே வேலையை தேடவேண்டியுள்ளது. அப்படி கிடைக்கும் வேலைக்குக் கூட மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்படுகின்றது. இந்த சட்ட விரோத குடியேறியாக வேலை பார்ப்பதற்கு அவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று பணம் கட்டி வந்துள்ளார் என்பது தான் இன்னும் சோகம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...