Pages

Wednesday, May 3, 2017

சவூதி அரேபியாவின் அப்ஹா, ஜஸானில் மழை வெள்ளம்; பாறைச்சரிவுகளால் கடும் பாதிப்பு

அதிரை நியூஸ்: மே-03
சவுதி அரேபியாவின் அஸீர் மாகாணத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ரோடுகள் முழ்கின, பல இடங்களில் பாறைச்சரிவுகளும் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்ஹா விமான நிலையத்திற்கான புறப்பாடு மற்றும் விமான வருகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பக்ராஹ் பள்ளத்தாக்கில் வெள்ள நீரில் அடித்துத் செல்லப்பட்ட 3 வாகனங்களும் அதிலிருந்த பயணிகளும் மீட்கப்பட்டனர் எனினும் 30 வயது சவுதி இளைஞர் ஒருவர் மரணமடைந்ததுடன் சூடான் நாட்டைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஒருவரையும் காணவில்லை. ஜஸானிலும் சில வாகனங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றாலும் அதை குறித்த மேலதிக தகவல் இல்லை.

இந்த மழை வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த பெருமழை வெள்ளம் மற்றும் பாறைச்சரிவுகளால் மஹாயெல் அஸீர், ஷம்லாத், அல்ரீஸ், பிர்ஸாத், அல் முஸ்லீம், அல் ரவ்ஹா, பாரிக், அல் ஷம்மா, தில், ஷியார், அல் நமஸ், தனோமாஹ், பனீ அம்ர், அல் தைர், அல் ஹஷர், அல் ஜன்பாஹ், அல் ஜஸாஹ், ஜபல் அல் மாதி ஆகிய ஊரகப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்றாலும் அதிகாரிகளின் துரித மீட்புப் பணிகளால் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...