Pages

Friday, May 5, 2017

குடிநீருக்காக அண்டார்டிகாவில் இருந்து பனிமலையை புஜைராவுக்கு இழுத்துவர திட்டம் !

அதிரை நியூஸ்: மே-05
44:38   وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏ 
44:38. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

44:39   مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏ 
44:39. நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே அன்றி, இவைகளை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிந்துகொள்வதில்லை.

எத்தனையோ கற்பனைகள் நிஜமாகியுள்ளன, எத்தனையோ மனிதத் தேவைகள் புதிய கனவுத் திட்டங்களை நோக்கித் தள்ளியுள்ளன, எத்தனையோ சாத்தியமற்ற விஷயங்கள் அனாயசமாக செய்து காட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்றாய் எங்களாலும் இயலும் என்று களத்தில் குதித்துள்ளது அபுதாபியை சேர்ந்த நிறுவனம் ஒன்று.

உலகிற்கு தேவையான குடிநீரில் சுமார் 70 சதவிகிதம் அண்டார்டிகா எனும் கண்டத்தில் பனிமலைகளாக உறைந்துள்ளன. இன்னொரு பக்கம் குடிநீருக்கான தேவையும் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன. அபுதாபியை சேர்ந்த 'நேஷனல் அட்வைஸர் பீரோ லிமிடெட்' எனும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அப்துல்லா முஹமது சுலைமான் அல் ஸ்ஹேஹி அவர்கள் (Managing director of National Advisor Bureau Limited) இதற்கு இன்றைய உலகில் சாத்தியமாகும் ஆனால் சவாலான ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார். இதே போன்றதொரு திட்டம் 1970 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவால் தீட்டப்பட்டு அன்றைய பொருளாதாரக் காரணங்களால் கைவிடப்பட்டது.

புஜைராவிலிருந்து சுமார் 12,600 கி.மீ தூரத்தில் அண்டார்டிகா கடலில் மிதந்து கொண்டுள்ள சுமார் 20 பில்லியன் கேலன் சுத்தமான நீருடைய ஐஸ் மலை ஒன்றை நவீன இழுவை கப்பல்கள் மூலம் இழுத்து வந்து புஜைரா கடற்கரையில் நிறுத்தி அதிலிருந்து பெறும் தண்ணீரை கொண்டு சுமார் 1 மில்லியன் மக்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு குடிநீர் வழங்கலாமாம்.

மேலும், ஐஸ்மலை வருகையால் பல்லாயிரக்காணக்கான சுற்றுலாவாசிகளும் புஜைராவிற்கு விஜயம் செய்வர். இந்த பிரம்மாண்ட பனிமலை வருகை அமீரகம் மற்றும் ஓமனின் சீதோஷ்ண நிலையில் சிறுமாற்றங்களை ஏற்படுத்தி மழை மற்றும் குளிருக்கு காரணமாக அமையும் என்றும் அல் ஸ்ஹேஹி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுவாக, கடல் மட்டத்திற்கு மேல் தலையை நீட்டிக்கொண்டிருக்கும் பனிமலையை விட கடலுக்கடியில் இருக்கும் பனிமலை சுமார் 80 சதவிகிதம் வரை மிகப்பெரியவை, மிகவும் சுத்தமான நீரை கொண்டவை. இந்த பனிமலையை புஜைராவிற்கு கட்டி இழுத்து வரக்கூடிய செயல்திட்டம் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் துவங்கவுள்ளது என்றாலும் இதன் கடல் பயண காலம் ஒரு வருடம் ஆகலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இழுத்து வரப்படும் பனிமலை உடைக்கப்பட்டு ராட்சத தண்ணீர் தொட்டிகளில் சேகரிப்பட்டு பின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என இந்த மிகப்பெரும் சவால் திட்டத்தை முன்வைத்துள்ள அல் ஸ்ஹேஹி தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்நாட்டின் எஞ்சிய ஆற்றுநீரை கடலடியில் ராட்சத குழாய் பதித்து அமீரகத்தில் தேக்கி வைக்கும் ஐடியா ஒன்றையும் அல் ஸ்ஹேஹி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒருமுறை ஆரம்பத்தில் சுட்டியுள்ள குர்ஆன் வசனத்தையும், இறுதியில் உள்ள நபிமொழியையும் உள்வாங்கி வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

செல்வம் பொங்கிப் பிரவாகித்து அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும் அரபுப் பிரதேசம் நதிகளும் சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்தநாள் வராது. (நூல்: முஸ்லிம் 1681)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...