Pages

Tuesday, May 9, 2017

அபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் ( படங்கள் )

அதிரை நியூஸ்: மே-09
அபுதாபி : அபுதாபியில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 04.05.2017 வியாழக்கிழமை ரத்ததான முகாம் அரேபியா டாக்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் அபுதாபி ரத்ததான மைய டாக்டர் தலைமையிலான குழுவினர் பங்கேற்று ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு ரத்ததானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அரேபியா டாக்சி பொது மேலாளர் ராஜா மீரான், மேலாளர் அகமது அஸ்பாக் உள்ளிட்ட அதிகாரிகள் ரத்ததானம் செய்தவர்களை பாராட்டினர்.
அறுவை சிகிச்சை உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு பலரும் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். முதுவை ஹிதாயத், சையது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த முகாமில் 47 பேர் ரத்ததானம் செய்தனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...