Pages

Tuesday, May 2, 2017

தஞ்சை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (02.05.2017) நடைபெற்றது.

இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து மற்றும் குடிநீர் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி கோரும் கருத்துருவினை முன்னரே அனுப்பி வைக்க வேண்டும். குடிநீர் பணிகளை தேர்வுசெய்யும் போது தொடர்புடைய மண்டல அலுவலர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.  நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை விரைவில் முடித்திட வேண்டும்.  மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தினை தொடர்புடைய மின்வாரிய உதவிப் பொறியாளர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கேற்ப மின் மோட்டாரினை இயக்கிட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அப்பகுதியில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பெறின் தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவையிலுள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகளை 05.05.2017க்குள் துண்டித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  பைப் லைன் விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளக் கூடாது.

கோடை காலத்தில் பொது மக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள்  அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...