Pages

Monday, May 1, 2017

அமெரிக்கா விசா பெற நூதன வழிபாட்டில் இறங்கும் இந்தியர்கள் !

அதிரை நியூஸ்: மே-01
உலகிலேயே அதிக மூளை திருட்டில் ஈடுபடும் நாடு என்ற பெயர் அமெரிக்காவிற்கு உண்டு, அதாவது வெளிநாட்டு அறிவாளிகளை தன்னுள் ஈர்த்துக் கொண்டு அவர்களின் திறமையை அமெரிக்காவின் திறமையாக வெளிக்காட்டும்.

அதேபோல், இந்தியாவில் நமது வரிப்பணத்தில் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு தங்களின் உழைப்பை தாரைவார்க்கச் செல்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததும் உண்டு ஆனால் அமெரிக்காவிற்கு செல்பவர்கள் எல்லாம் சிந்திக்கும் திறனுடையவர்கள் அல்ல என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமிது.

டிரம்ப் எனும் வாலண்டியர் கோமாளி அமெரிக்கா ஜனாதிபதியானது முதல் பல்வேறு துக்ளக் தர்பார் சட்டங்களை போட்டு வருகின்றார், அதில்  “H-1B” எனும் வரம்புகள் உயர்த்தப்பட்ட வேலைவாய்ப்பு விசா தடையும் ஒன்று. இதனால் உலக நாடுகள் பல பாதிக்கப்பட்டாலும் இந்தியர்கள் அதில் முதன்மையானவர்கள். இந்தத் தடையை உடைக்க என்ன செய்யலாம் என யோசித்த இந்தியர்கள் சிலர் கண்டுபிடித்த குறுக்குவழியே விசா கோயில் வழிபாடு.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதி சில்கூர். இங்குள்ள பாலாஜி கோயில் ஒன்று சுமார் 500 ஆண்டுகாலம் பழமைவாய்ந்தாக நம்பப்படுகிறது, இந்தக் கோயிலின் மீது நம்பிக்கையுடைய சிலர் சூட்டியுள்ள மற்றொரு பெயரே 'விசா கோயில்'

தற்போது டிரம்பின் தடையை தொடர்ந்து தினமும் தெலுங்கர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பிற மாநில இந்தியர்களும் தினசரி வருகை தந்து தங்களுடைய பாஸ்போர்ட், விசா விண்ணப்பப் படிவங்கள் உட்பட பல ஆவணங்களையும் வைத்து வழிபாடு நடத்தினால் அமெரிக்கா விசா கிடைக்கும் என நம்புகின்றனர். ஒரு சிலருக்கு எதார்த்தமாக கிடைத்த விசாக்களை கூட இந்த வழிபாட்டுடன் தங்கள் நம்பிக்கையை கலந்து முடிச்சுப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இதை நம்பாதவர்களை நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ' யூ ஆர் ஆன்ட்டி இன்டியன்' என்று சொல்லவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் இது மூடநம்பிக்கையல்ல, எங்களின் ஆன்மீக நம்பிக்கை என்று வியாக்கியானமும் கொடுக்கத் துவங்கியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

1 comment:

  1. அடடா என்ன சிறப்பு.... டிரம்ப் ஐ ஜனாதிபதி பதவியில் இருந்து தூக்க எதாவது கோயில் கண்டுபிடிங்க ரொம்ப நல்ல இருக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...