Pages

Saturday, May 20, 2017

சிங்கப்பூரில் கார்களை டெலிவரி செய்யும் 'வென்டிங் மெஷின்'

அதிரை நியூஸ்: மே 20
பொதுவாக வென்டிங் மெஷின்கள் (Vending Machines எனப்படும் பொருட்கள் விற்பனை செய்யும் இயந்திரங்கள்) அதிகப்பட்சம் ஓர் ஆள் உயரம் இருக்கும், இதிலுள்ள பட்டனை அழுத்தினால் குளிர்பானங்கள், டீ காபி போன்ற சூடான பானங்கள், பொம்மைகள், சக்லேட்டுகள் போன்ற பலவகை பொருட்களை பெறலாம் ஆனால் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 15 மாடி உயர வென்டிங் மெஷினிலிருந்து கார்களை பெறலாம்.

சிங்கப்பூர் எனும் குட்டி நாட்டின் நிலப்பரப்பு சுமார் 80 கார்களை விற்பனைக்காக தரையில் ஒரே இடத்தில் நிறுத்தி கடைவிரிக்க சூழல் அனுமதிக்காது. சிங்கப்பூர் ஆட்டோபான் எனும் உபயோகப்படுத்தப்பட்ட கார் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் கேரி ஹோங் எனும் சீனர் தனது மகனுடன் ஒரு கடைக்குச் செல்கையில் ஒரு வென்டிங் மெஷினுள் பொம்மை கார்கள் அடுக்கப்பட்டுள்ளதையும் அதிலிருந்து தன் மகன் ஆர்வத்துடன் கார் ஒன்றை எடுப்பதையும் பார்க்கின்றார், பிறந்தது புதிய ஐடியா 15 மாடி உயரக் கட்டிடத்தில் வென்டிங் மெஷின் பாணியில் சுமார் 80 கார்களை நிறுத்துகிறார், கீழே சின்னத்திரையில் அந்தக் கார்களின் படங்களுடன் விபரங்கள் இடம் பெறுகின்றன.

வாடிக்கையாளர் தனக்குத் தேவையான காரை தேர்வு செய்து சின்னத்திரையிலுள்ள பட்டனை அழுத்தினால் சில நிமிடங்களில் அந்தக் கார் லிப்டுகள் உதவியுடன் கீழிறக்கப்பட்டு டெலிவரி செய்யப்படுகிறது. இந்தப் புதிய விற்பனையுக்தியால் அவரது வியாபாரம் சுமார் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாம். இவரிடம் அதிஉயர்வகை புதிய கார்களும் வென்டிங் மெஷின் பாணி விற்பனையில் உள்ளதாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...