Pages

Sunday, May 21, 2017

அதிரையில் TNTJ கோடைகால பயிற்சி முகாம் நிறைவு - பரிசளிப்பு விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மே 21
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை 2 சார்பில் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அல்-ஹிக்மா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் கடந்த ஏப். 20 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை இரவு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. முகாமிற்கு அவ்வமைப்பின்
கிளைத் தலைவர் பஜால் முகைதீன் தலைமை வகித்தார்.

அவ்வமைப்பின் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி 'மறுமையில் வெற்றி பெற' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்-ஹிக்மா இஸ்லாமிய மகளிர் கல்லூரி முதல்வர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கல்லலூரியில் நடத்தப்பட்டுவரும் பாடத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

பயிற்சி முகாமில் பல்வேறு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, முகாமில் மாணவிகளின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...