Pages

Tuesday, June 13, 2017

குவைத் முன்னணி மருத்துவமனைக்கு சென்னையில் நேர்முகத் தேர்வு !

கோப்புப் படம்
அதிரை நியூஸ்: ஜூன் 13
குவைத் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என Overseas Manpower Corporation Limited-ன் நிர்வாக இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் தகவல் தெரவித்துள்ளார்.

குவைத் எண்ணெய் நிறுவனத்தில் (Kuwait Oil Company-KOC) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் முன்னணி மருத்துவமனைகளுக்கு நிர்வாகப் பிரிவு டிப்ளமோ தேர்ச்சியுடன் மருத்துவப்பிரிவில் 5 வருட பணி அனுபவமுள்ள ஆண்/பெண் மேற்பார்வையாளர்கள் (Supervisor), இளநிலைப்பட்டத்துடன் டிப்ளமோ கம்ப்யூட்டர் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவமுள்ள பெண் டெக்னிகல் உதவியாளர்கள் (Technical Assistant), ஒரு வருட பணி அனுபவத்துடன் GNM/ANM தேர்ச்சி பெற்ற சேப்பர்ஓன் (Chaperone)  பெண் செவிலியர்கள், ஒரு வருட அனுபவமுள்ள பெண் மொழிபெயர்ப்பு கிளினிகல் உதவியாளர் (Clinical Assistant Interpreter), இரண்டு வருட பணி அனுபவமுள்ள ஆண்/பெண் புNஆ நர்சிங் உதவியாளர் (Nursing Aide), டிப்ளமோ அறுவைச் சிகிச்சை டெக்னிசியன் தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவமுள்ள ஆண்ஃபெண் அறுவைச் சிகிச்சைப் பிரிவு உதவியாளர்கள் (Operating Theatre Assistant), மூன்று வருட பணி அனுபவமுள்ள பெண் உதவி மகப்பேறு மருத்துவ டெக்னிசியன்கள் (Assistant Medical Technician (Obs & Gyne) மற்றும் இரண்டு வருட பணி அனுபவமள்ள வார்டு பிரிவு பணியாளர்கள் (Ward Clerk) போன்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு 14.06.2017 முதல் 24.06.2017 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மேற்பார்வையாளருக்கு (Supervisor)  ரூ.1,60,000/- டெக்னிகல் உதவியாளருக்கு (Technical Assistant) ரூ.95,000/-, சேப்பர்ஓன் (Chaperone) ரூ.48,000/-, கிளினிகல் உதவி இன்டர்பிரிடர் (Assistant Interpreter) ரூ.74,000/-, செவிலியர் எய்டுக்கு (Nursing Aide) ரூ.50,880/-, அறுவைச் சிகிச்சை உதவியாளருக்கு (Operating Theatre Assistant ) ரூ.48,000/-, உதவி மகப்பேறு மருத்து டெக்னிசியன்களுக்கு (Assistant Medical Technician-Obs & Gyn) ரூ.64,000/- மற்றும் வார்டு பிரிவு பணியாளருக்கு (Ward Clerk) ரூ.74,000/- மாத ஊதியம் மற்றும் ஒரு வருட ஒப்பந்தத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் உணவுப்படி ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் அனுபவமுள்ளவர்கள் www.omcmanpower.com என்ற வலைதளத்தில் உள்ள sample resume (KOC) என்ற தலைப்பினை கிளிக் செய்து சுயவிவர மாதிரி படிவத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் omckoc2017@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 8.6.2017க்குள் அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு 044-22505886-22502267-22500417-8220634389 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.  இவ்வாறு Overseas Manpower Corporation Limited- ன் நிர்வாக இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...