Pages

Saturday, June 3, 2017

மாட்டிறைச்சி தடை: மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

தஞ்சாவூர், ஜூன் 03
இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை செய்து நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகவும், தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான மத்திய பாஜக அரசின் இச்செயலை கண்டித்து, தடை அரசாணையை திரும்பபெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை இரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இசட். முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜே.ஹாஜி ஷேக் வரவேற்றுப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. அபூபக்கர் சித்திக், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் எம்.எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெயினுலாபுதீன், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கி.நா.பனசை அரங்கன், ஹனபியா பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி. அப்பாஸ் அலி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கரிகாலன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநகர செயலாளர் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...