Pages

Wednesday, July 5, 2017

அதிரையில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையம் கட்டுமானப்பணி தொடக்கம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூலை 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணியின் பூமி பூஜை திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றி அமைப்பதற்காக, இப்பாதை, கடந்த 2012ல் மூடப்பட்டது. இத்திட்டத்தில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே உள்ள, 73 கி.மீ., துாரத்தில் ரயில் பாதை மற்றும் நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே, அதிராம்பட்டினம், திருநெல்லிக் காவல், மாங்குடி, மாவூர் சாலை, அம்மனுார், ஆலத்தம்பாடி, மணலி ஆகிய 7 இடங்களில் ரயில் நிலைய கட்டடங்கள், ரூ. 17.26 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அதிராம்பட்டினத்தில் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடை மேடை மற்றும் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கூடம், பயணியர் ஓய்வு அறை உள்ளிட்ட பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்த நிலையம் கட்டுவதற்கு திட்டமிட்டு, இதற்கான கட்டுமானப்பணியின் பூமி பூஜை திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதில் ரயில்வே அதிகாரிகள், ஒப்பந்தாரர்கள் கலந்துகொண்டனர். இப்பணிகள் அனைத்தும், 10 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதையில், தில்லைவிளாகம் மற்றும் முத்துப்பேட்டையில் நிலைய கட்டடம், பிளாட் பாரங்கள், நடை மேம்பாலங்கள், பிளாட் பார மேற்கூரை ஆகியவை, 19.23 கோடி செலவில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

1 comment:

 1. ரயில் சேவையை நிறுத்தி 5 வருஷம் ஆயிடிச்சு. இப்போ தான் கட்டுமான பணியே தொடக்கமா? காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை உள்ள பணிகள் 90% முடிஞ்சி வரும் டிசம்பர் மாசம் சோதனை ஓட்டத்துக்கு திட்டமிட்டு இருக்கிறதா சொல்றாங்க. ஆனால் பட்டுக்கோட்டை- திருவாரூர் பணிகள் ஆமை வேகத்தில் நடந்துகிட்டு இருக்கு. நம்மூரில் இன்னும் தண்டவாளம் கூட போடவில்லை.

  அரசியல் பின்னணி நிறையா இருக்கு. MP TR.பாலு திருவாரூர்-பட்டுக்கோட்டை பாதையை புறக்கணித்து விட்டு மன்னார்குடி-பட்டுக்கோட்டை பாதையை உருவாக்க திட்டமிட்டார். அதனால் தான் பட்டுக்கோட்டை-காரைக்குடி பணிகள் மட்டும் வேகமாக நடந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அவரின் நோக்கம் சென்னையிலிருந்து காரைக்குடிக்கும் ராமேஸ்வரத்திற்கும் மன்னார்குடி வழியாக ரயில் இயக்குவதே.

  ஏற்கனவே, TR.பாலு மன்னார்குடியிலிருந்து சென்னைக்கும், திருப்பதிக்கும், கோவைக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்புர்க்கும் தற்போது ரயில் சேவை இயங்குவதற்கு பெரும் காரணாமாக உள்ளார் என்பது குறிப்பிட தக்கது. TR.பாலுவின் சொந்த ஊருக்கு அவர் நல்லது செய்த காரணத்தினாலும் பக்கத்துக்கு தொகுதி MP MLA ஆகியோரின் அலட்சியத்தினாலும் திருவாரூர்-பட்டுக்கோட்டை பணி காலதாமதமாக நடந்து கொண்டு வருகிறது.

  எல்லா பணியம் எப்போ முடிஞ்சி, எப்போ சோதனை ஓட்டம் நடத்தி, எப்போ Clearance certificate வாங்கி எப்போ புதிய ரயில் விடுவாங்க. இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ? அப்படி புதிய ரயில் விட்டாலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிரையில் நிற்குமா? எத்தனை வருசமாக தான் கனவு கண்டுக்கிட்டு இருக்குறது?

  அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் வரி பணத்தை மற்ற பகுதி மக்கள் யார் யாரோ அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். நம்ம தொகுதி MP, MLA லாம் என்ன தான் பன்னிக்கிட்டு இருக்காங்க? எதுக்காக அவர்களுக்கு ஓட்டு போட்டோம்?

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...