Pages

Wednesday, July 12, 2017

41% வரி விதிப்பால் கண்ணீர் வடிக்கும் வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலாளர்கள் !

அதிரை நியூஸ்: ஜூலை 12
இந்திய அரசின் மொத்த வருமானத்தில் முக்கிய பங்குவகிப்பது வெளிநாடு வாழ் தொழிலாளர்கள் மாதாமாதம் தொடர்ந்து அனுப்பும் பணத்தின் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி எனும் உபரி வருவாய் (அதாவது நோகாமல் நொங்கு தின்பதற்கு ஒப்பானது).

அன்னியச் செலவாணியை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அள்ளித்தரும் வெளிநாடுவாழ் தொழிலாளர்களுக்கு பிரதியுபகாரமாக ஆண்ட, ஆளும் மத்திய அரசுகள் பெரிதாக எந்த சலுகையையும் செய்வது இல்லை மாறாக இந்திய விமான நிலையங்களில் பணிபுரியும் கஸ்டம்ஸ், இமிக்கிரேசன், விமான நிலைய ஊழியர்கள் போன்ற மத்திய அரசு துறைகளின் அக்கிரமத்திற்கும் ஆளாக வேண்டியுள்ளது.

பொதுவாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையே குடும்பத்தினரை காண இந்தியாவிற்கு வருகை தரும் குறைந்த வருமானத் தொழிலாளர்கள் தங்களின் விடுமுறைக்கு இடையில் குறைந்தபட்சம் 30 கிலோ என ஏஜென்டுகளால் வரையறுக்கப்பட்ட எடை அளவில் குடும்பத்தினருக்கு தேவையான அன்பளிப்புகள், தின்பண்டங்கள், விளையாட்டு சாமான்கள் என கிலோவுக்கு 11 திர்ஹம் என்ற கணக்கின் கீழ் சுமார் 330 திர்ஹம் சேவைக்கட்டணமாக செலுத்தி அனுப்புவது வழக்கம்.

1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு கடந்தாண்டு திருத்தப்பட்ட சட்டப்படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வரியின்றி அனுப்பலாம் என நடைமுறையில் இருந்ததை மத்தியில் ஆளும் வழிப்பறி அரசு ஜூன் 30 அன்று இரவோடு இரவாக ரத்து செய்துவிட்டு இந்திய ரூபாய் மதிப்பில் 2,000 க்கு (சுமார் 114 திர்ஹம்) மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு 10% சதவிகித அடிப்படை கஸ்டம்ஸ் வரி (Basic Customs Tax), 3% கல்வி வரி (?) (Educational Cess) மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி 28% (Integrated Goods & Service Tax - IGST) என மொத்தம் 41% வரியை முன்னறிவிப்பு ஏதுமின்றி இரவோடு இரவாக கொண்டு வந்து ஜூலை 1 முதல் கட்டாய வசூலில் இறங்கியுள்ளனர்.

இந்த 41% புதிய வரியால் சுமார் 30 கிலோ கார்கோ அனுப்புவோர் மேலதிகமாக சுமார் 4,000 ரூபாய் வரை கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த வரி உயர்வை எதிர்த்தும் வரி விதிப்பிற்கு முன் அனுப்பப்பட்ட கார்கோவிற்கு 41 சதவிகித வரிளை வசூலிக்கக்கூடாது என கோரியும் டெல்லி உயர்நீதி மன்றத்தில் கார்கோ ஏஜென்டுகள் சங்கம் சார்பாக மனு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று  (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு வரும் வரை டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 300 டன் கார்கோவை வெளியே எடுக்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர் இதனால் அமீரகத்திலிருந்து கார்கோ அனுப்பிய சுமார் 8,000 குறைந்த வருமான தொழிலாளர்களுடைய சாமான்கள் சிக்கியுள்ளன. ஒருவேளை நீதிமன்ற உத்தரவு 41% வரி வசூலிப்பிற்கு ஆதரவாக வந்தால் கூடுதல் வரியை தொழிலாளர்களே செலுத்த வேண்டும் என கார்கோ ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர்.

கவர்ச்சியில் மயங்கிய 31 சதவிகித முட்டாள்களின் தேர்வால் ஒட்டுமொத்த இந்தியர்களும் இன்னும் என்னென்ன கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை. மக்களின் ஒரே நம்பிக்கையான நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?                                                                                                                                          
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...