Pages

Monday, July 10, 2017

அதிரை பைத்துல்மால் குவைத் கிளை முன்வைக்கும் 6 அம்ச திட்டங்கள் !

கூட்டத்தில் ஏபிஎம் குவைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் பேசுகிறார்
அதிரை நியூஸ்: ஜூலை 10
அதிரை பைத்துல்மால் குவைத் கிளை ஜூலை மாத மாதாந்திரக் கூட்டம் குவைத் சால்மியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெருநாள் பண்டிகையையொட்டி அதிரை பைத்துல்மால் தலைமையகத்தில் நடந்த பெருநாள் சந்திப்பு கூட்டத்தில் சகோதரர் ஜெய்னுல் ஹுசைன் கலந்துகொண்டு முன்வைத்த ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்து, அதன் சாத்தியக்கூறுகளை மீண்டும் ஆராய்ந்து அதனை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும்படி அதிரை பைத்துல்மாலுக்கு பரிந்துரை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

புதிய திட்டங்கள்:
1. அதிரை ஆலிம்களின் முன்னேற்றத்திற்கு Technical Courses பயிற்சியளிப்பது
2. உள்நாடு மற்றும் வெளிநாடு வாழும் அதிரையர்களின் Database உருவாக்குவது.
3. அன்னதான திட்டம்
4. அனாதைகள் பொறுப்பு திட்டம் - Sponsor a Child
5. சுத்திகரிக்கப்பட்ட RO, குளிர்சாதன குடிநீர் திட்டம்
6. மருத்துவ உதவி திட்டம்

மேல்குறிப்பிட்ட திட்டங்களை குவைத் கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் முன்வைத்து, கேள்விகளுக்கான விளக்கமும் அளித்தார். மேலும் கூறுகையில், "எந்தவொரு அரசியல், பொருளாதார ஆதாயமற்ற அதிரை பைத்துல்மால், அதிரையர்களின் மேம்பாட்டிற்காக அளப்பெரும் பணிகளை ஏற்கனவே சிறப்பாக செய்துவரும்பொழுது இப்பணிகளையும் சேர்த்து அல்லாஹ்வின் திருப்தியை பெறவேண்டும் என்பதே எங்களது விருப்பம்", என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...