Pages

Saturday, July 8, 2017

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் 18 முதல் 21 வரை நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ரயில் நிலையத்தில் எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் 18 முதல் 21 வரை நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை (07.07.2017) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். வாக்காளர் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான விளம்பர பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியானது இரயிலடியிலிருந்து பழைய பேருந்து நிலைய வரை நடைபெற்றது.

இப்பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்க்ள தெரிவித்ததாவது;
18 வயது நிரம்பியவர் அல்லது 1.1.1999க்கு முன் பிறந்தவராக இருப்பின், உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வலுவான ஜனநாயகத்தில் பங்கேற்றுக்கொள்ளுங்கள்.  வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்ப்பதற்கு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலேயே ஆன்லைன் மூலமாக படிவம் 6ஐ பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம்.  மற்ற ஏனைய வாக்காளர்கள் 1.7.2017 முதல் 31.07.2017 வரை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் வருகை புரிவர்.  அவரிடம் உங்களின் விவரங்களை சரியாக தெரிவித்து அவர் கொண்டு வரும் படிவம் 6ஐ பூர்த்தி செய்து அவரிடம் கொடுத்தால் போதுமானது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று படிவம் 6 பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். மாற்றுத்திறனாளிகள் அவர்களின் இல்லத்திற்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து பெற்றுக் கொள்வார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 டயல் செய்து தங்கள் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

தங்களுக்கு அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவம் 6ஐ ப10ர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும், http://elections.tn.gov.in/voterservice.aspx என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தலாம்.  உங்களை கைபேசி மூலம் வுNநுடநஉவழைளெ  என்ற  கைபேசி செயலினை பதிவிறக்கம் செய்து வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.  இசேவை மையத்தின் மூலம்  படிவம் 6ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

இப்பேரணியில் மாநகராட்சி ஆணையர் வரதராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...