Pages

Tuesday, July 4, 2017

காரைக்குடி ~ பட்டுக்கோட்டை அகல ரயில் பாதைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு !

பட்டுக்கோட்டை, ஜூலை 03
காரைக்குடி - பட்டுக்கோட்டை  அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பரில் முடிவடையும் என்றார் தென்னக ரயில்வேயின் முதன்மைப் பொறியாளர் காளிமுத்து.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிடுவதற்காக சனிக்கிழமை  வந்திருந்த அவரை பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என். ஜெயராமன், பொருளாளர் எஸ்.சுந்தர்ராஜுலு,  நிர்வாகிகள் ஷேக்பரீது, பாலசுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அப்போது காரைக்குடி பட்டுக்கோட்டை வழித்தடத்தில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிரைநியூஸ் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக  செய்ய வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய முதன்மைப் பொறியாளர் காளிமுத்து, 'காரைக்குடி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில்  75 கி.மீ தொலைவுக்கு  அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடித்து,  ரயில் இஞ்சினைக் கொண்டு சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சிறந்த முறையில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்' என்றார்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...