Pages

Thursday, July 6, 2017

அதிரையில் நடந்த கால்பந்தாட்டப் போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி !

காயல்பட்டினம் அணி
அதிராம்பட்டினம், ஜூலை 06
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 23 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 27ந் தேதி தொடங்கி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கரம்பயம், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி உள்ளிட்ட 26 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை நடந்த தொடர் போட்டியில் மன்னார்குடி, காயல்பட்டினம் ஆகிய அணிகள் மோதின.  விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. பின்னர் இரு அணிகளுக்கும் டிரை ப்ரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. முடிவில் 3-4 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தின் நடுவர்களாக கார்த்திகேயன், ஷஃபானுதீன் ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், அதிரை அஹமது ஹாஜா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். வழமைபோல் இன்றைய ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை ( 07-07-2017 ) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவை, காயல்பட்டினம் அணிகள் மோத உள்ளனர். ஆட்டம் சரியாக 5 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
என். முகமது ரபீக்
மன்னார்குடி அணி
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...