Pages

Wednesday, July 5, 2017

அபுதாபி டிரைவர்களுக்கு கருப்பை வெள்ளையாக்கும் வாய்ப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 05
தலைப்பு கொஞ்சம் ரசனையாக இருக்கட்டுமே என்ற நோக்கில் சூட்டப்பட்டது என்றாலும் கீழ்வரும் செய்தியுடன் தொடர்புடையதே.

அபுதாபியில் 2017 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பாக அதாவது ஜூன் 30 வரை நடைபெற்ற சிறிய ரக போக்குவரத்துக் குற்றங்களுக்காக கரும்புள்ளிகளை பெற்ற டிரைவர்களின் கணக்கிலிருந்து அவை முழுமையாக நீக்கப்படுவதாக அபுதாபி போலீஸார் அறிவித்துள்ளனர்.

இந்த அதிரடி சலுகையின் மூலம் சுமார் 883,000 குற்றப்பதிவுகளுக்கு எதிராக டிரைவர்கள் பயன்பெறுகிறார்கள். அதேவேளை ஆபத்தான போக்குவரத்து குற்றங்களாக கருதப்படும் காட்டுத்தனமாக ஓட்டுதல், அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் வாகனத்தை செலுத்துதல், சிவப்பு விளக்கு சிக்னலை மீறிச் செல்லுதல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஓட்டுதல், மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொண்ட நிலையில் வாகனம் இயக்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டோருடைய கரும்புள்ளி நீக்கப்படாது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...