Pages

Tuesday, July 4, 2017

வங்கி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய முன்னாள் சேர்மன் கோரிக்கை !

அதிராம்பட்டினம், ஜூலை 04
இடப் பற்றாக்குறையை போக்க வங்கி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம் வங்கி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அரசுடைமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளை இயங்கி வருகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். வங்கி வேலை நாட்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். வங்கியினுள் ஏற்படும் இடநெருக்கடியால் வாடிக்கையாளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர முடியாமல் சிரமப்படுவதாகவும், மேலும் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் வங்கி அலுவலகத்திலிருந்து வெளியேறுவது கடினம் எனக் கூறி, வங்கி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம் வங்கி மேலாளரிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கோரிக்கை மனு அளித்தார். அப்போது சமூக ஆர்வலர்கள் அப்துல் பத்தாஹ், சம்சுதீன், ஜமாலுதீன், அஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;

5 comments:

  1. எத்தனை நாட்களுக்குதான் பெருந்தலைவா்

    ReplyDelete
  2. எத்தனை நாட்களுக்குதான் பெருந்தலைவா்

    ReplyDelete
  3. எத்தனை நாட்களுக்குதான் பெருந்தலைவா்

    ReplyDelete
  4. கொஞ்சம் தூக்கத்தை விட்டு முழித்து பாருங்க அவருதான் EX பெருந்தலைவர் என்று போட்டு தானே இருக்கார் அதிலென்ன சந்தேகம் - லைப் லாங்..

    ReplyDelete
  5. Dear Brother,

    For your information, The letter shall not be valid unless until its duly signed by person.

    Kindly look into bottom of the letter there is no signature on it.

    Regards.

    SM.Dubai.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...