Pages

Wednesday, July 5, 2017

ஜித்தாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு ( படங்கள் )

அதிரை நியூஸ்: ஜூலை 05
சவூதி அரேபியா, ஜித்தா - இந்திய தூதரக பன்னாட்டுப்பள்ளி சார்பில் கல்விச் சேவை புரிந்த ஆசிரியர்கள், சாதனை நிகழ்த்திய மாணவர்கள், ஆகியோருக்கு விருது வழங்கும் விழா பள்ளி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சவூதிக்கான இந்தியத் தூதர் அகமது ஜாவித், துணைத்தூதர் முஹம்மது நூர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு கல்வியில், விளையாட்டில் சாதனை மாணவர்க மற்றும் கல்விச்சேவை ஆற்றிய ஆசிரியர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். இதில் பள்ளியளவில் சிறப்பிடம், விளையாட்டு போட்டிகளில் சாதனை, நன்னடத்தை உள்ளிட்ட பல்வேறு சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக கல்விச் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஜித்தா தமிழ் சங்கம் நிறுவனரும், சவூதி அய்டா சேவை அமைப்பின் தலைவருமாகிய அதிரை ரஃபியா, முகைதீன் அபூ மிஷால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்பள்ளியில் சுமார் 11,500 மாணவ, மாணவிகள், 650 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...