Pages

Wednesday, July 5, 2017

சீனாவில் மற்றொரு கண்ணாடி பாலம் திறப்பு (வீடியோ)

அதிரை நியூஸ்: ஜூலை 05
கடந்த வருடம் சீனாவின் மத்திய ஹூனான் மாகாணத்தில் சுமார் 430 மீட்டர் நீளத்தில், 300 மீட்டர் உயரத்தில் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பாலம் திறக்கப்பட்டு அதிகமான பார்வையாளர்கள் குவிந்ததால் ஒரு சில தினங்களிலேயே தற்காலிகமாக மூடப்பட்டது.

தற்போது சீனாவின் தென்மேற்குப் பகுதியான சொங்கிங் (chongqing) பிரதேசத்தில் V வடிவத்தில் சுமார் 123 மீட்டர் உயரத்தில் (400 அடி) கட்டித் தொங்விடப்பட்டுள்ள பாலத்தின் நீளம் 70 மீட்டர். இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 30 நபர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

பார்வையாளர்கள் பலரை குழைநடுங்கச் செய்யும் இந்தப் பாலம் பலரை பரவசப் படுத்தத்தவும் தவறவில்லை. சந்தோஷமாக நடந்து புகைப்படம் எடுத்துக் கொள்வோரும் உண்டு, விட்டால் போதுமென கண்ணாடி தரையில் உருண்டு பெறண்டு அரற்றுவோரும் உண்டு.

சுற்றுலாவாசிகளை குறிவைத்து கட்டப்படும் இத்தகைய கண்ணாடி பாலங்கள் சீனாவில் மேலும் பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வான்செங் பிரதேசத்திலுள்ள ஓர்டோவிசியன் பூங்காவிலுள்ள (Ordovician park in Wansheng) கண்ணாடி பாலம் உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...