Pages

Wednesday, July 5, 2017

தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி கட்டுதாம் - ஜிஎஸ்டி வேதனை !

அதிரை நியூஸ்: ஜூலை 05
ஜிஎஸ்டி எனும் மத்திய அரசின் வழிப்பறி கொள்ளையால் இந்தியர்கள் தேவையற்ற தெண்டம் அழுது கொண்டுள்ள நிலையில் இனி இந்தியாவில் தங்கம் வாங்குவதை விட துபையில் தங்கம் வாங்குவது மலிவு என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தங்கத்தின் மீது 3 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவை விட துபையில் சுமார் 13 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம். இந்த விலை குறைவு எதிர்வரும் 2018 ஜனவரி முதல் அமீரகத்தில் விதிக்கப்படவுள்ள வாட் வரி விதிப்பிற்கு பிறகும் நீடிக்கும். அதேவேளை இந்தியாவில் கூடுதலாக மொத்தம் 14 சதவிகித வரியை அழ வேண்டியிருக்குமாம்.

இந்தியாவில் தங்கத்தின் மீது 3 சதவிகித ஜிஎஸ்டி வரியும், நகை உற்பத்தி செலவின் மீது 5 சதவிகித ஜிஎஸ்டி வரியும் கூடுதலாக விதிக்கப்பட்டு இருப்பதற்கு முன்பாக 1 சதவிகித கலால் வரியும், 1.2 சதவிகித வாட் வரியுமே விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கொண்டு செல்லும் தங்கத்தின் மீது விதிக்கப்படும் 10 சதவிகித வரியை சேர்த்தாலும் கூட இந்திய தங்க விலையை விட துபையில் தங்க விலை குறைவாகத் தான் இருக்குமாம்.

உதாரணத்திற்கு, ஜூலை 1 ஆம் தேதியன்று கேரளாவில் ஒரு சவரன் நகை 22,536 ரூபாய்க்கு விற்கப்பட்டது அதேவேளை துபையில் இந்திய ரூபாய் மதிப்பில் 19,880 ரூபாய்கே விற்கப்பட்டதன் மூலம் சவரனுக்கு 2,656 ரூபாய்களை துபைவாழ் இந்தியர்கள் மிச்சப்படுத்த முடிந்ததாக மலபார் கோல்டு ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே இந்தியர்களே மிக அதிகமாக தங்க நகையை வாங்கக்கூடியவர்களாக உள்ள நிலையில் இந்திய நகை விற்பனை இந்த ஆண்டு மட்டும் சுமார் 650 முதல் 750 டன் வரை இருக்குமென்றும் இதுவே 2020 ஆம் ஆண்டிற்குள் 850 முதல் 950 டன் வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ துபையில் சரிந்திருந்த தங்க விற்பனையை தூக்கி நிறுத்தியுள்ளது மோடியின் ஜிஎஸ்டி வரி.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...