Pages

Thursday, July 6, 2017

தொழில் நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு பேரணி !

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக
தொழில் நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட  ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக ஜுலை முதல் வாரம் தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுவதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் / தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை அவர்களால் இன்று வியாழக்கிழமை (06.07.2017)  தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பேரணியானது குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டத்தின் 200 மாணவிகள், ‘நீரின்றி அமையாது உலகு திறனின்றி அமையாது நல்வாழ்வு’, ‘ஒருமுறை கண்டால் அது கனவு, இருமுறை கண்டால் அது ஆசை, பலமுறை கண்டால் அது இலட்சியம்’ - ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ‘வேலையைத் தேடாதே, வேலையை உருவாக்கு’ - இப்படிக்கு சுயதொழில்! ‘பண்பட்ட பயிற்சியும், முற்றாத முயற்சியுமே முன்னேறும் வழிகள்! உயர்கல்வி, கல்வி உதவித்தொகை ஆலோசனைகள் - தஞ்சாவூர் தொழில்நெறி வழிகாட்டல் மையம் என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், குந்தவை நாச்சியார் கல்லூரியில் தொடங்கி, இராஜப்பா நகர், பாலாஜி நகர் வழியாக மீண்டும் குந்தவை நாச்சியார் கல்லூரியில் பேரணி முடிவுற்றது.

இப்பேரணியில், துணை இயக்குநர் கோ.சம்பத், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இவேப) கா.பரமேஸ்வரி,  குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் கேத்தரின் நிர்மலா, தொழில்நெறி ஆலோசகர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...