Pages

Wednesday, July 5, 2017

அமெரிக்கா செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் இன்றுமுதல் லேப்டாப் தடை நீங்கியது

அதிரை நியூஸ்: ஜூலை 05
அமெரிக்கா செல்லும் வளைகுடா பிராந்திய நாடுகளின் விமானங்களில் லேப்டாப், டேப்லட் மற்றும் மின்சாதனப் பொருட்களை கேபின் பேக்கேஜ்களாக கொண்டு செல்ல அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை கடந்த ஞாயிறு முதல் அபுதாபியின் எதிஹாத் விமானத்தில் முதன்முதலாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

தற்போது அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளபடி பாதுகாப்பு சோதனைகளை துபை விமான நிலையங்களில் மேம்படித்தியுள்ளதை தொடர்ந்து இன்று (புதன்) முதல் உடனடியாக லேப்டாப் தடை எமிரேட்ஸ் விமானங்களிலும் விலக்கிக் கொள்ளப்பட்டு முன்புபோல் கேபின் பேக்கேஜ்களுடன் உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாக துபையின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேபோன்தொரு அறிவிப்பை நேற்று துருக்கி விமான நிறுவனமும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...