Pages

Saturday, July 8, 2017

சேவை குறைபாடு: செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் !

பொட்டலப் பொருள் குறித்து நுகர்வோர் செயலி மூலம் புகார் செய்யலாம் என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தொழில் நலத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
பொட்டலப் பொருளின் உறை மீது குறிப்பிட்ட விலைக்கும் கூடுதலாக பொருளை விற்பனைச் செய்தல், தரப்படுத்தப்படாத, முத்திரையிடப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல், எடையளவுகளை உரிய காலத்தில் மறுமுத்திரையிடப்படாமல் பயன்படுத்துதல், சோதனை எடைக்கற்கள், அளவைகள் வணிக வளாகத்தில் உரிய பரிசீலனை சான்றுடன் வைத்து பராமரிக்காமை போன்ற புகார்கள் குறித்து தெரிவிக்கலாம்.

மேலும், அளவுக் குறைவாக அல்லது எடை குறைவாக விற்பனை செய்தல், முத்திரையிடப்பட்டதற்கான பரிசீலனை சான்றை எடையளவு பயன்படுத்தப்படும் நிறுவனத்தின் வளாகத்தில் தெளிவாகத் தெரியக்கூடிய இடத்தில் காட்சிக்கு வைக்காமல் இருத்தல், பொட்டலமிடும் நிறுவனம் பேக்கர் லைசென்ஸ் பெறாமல் வணிகம் செய்தல், பொட்டலப் பொருளில் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர் இறக்குமதி செய்பவர் பெயர் முழு முகவரி குறிப்பிடப்படாதது, பொட்டலப் பொருளில் பொருளின் பெயர், நிகர எடை, எண்ணிக்கை, மாதம், ஆண்டு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்படாதது குறித்தும் புகார் செய்யலாம்.

இதுதொடர்பாக நுகர்வோர் புகார் தெரிவிக்க ஏதுவாக நிறுவனத்தின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி விவரங்களை குறிப்பிட்டு செயலி மூலம் புகைப்படமாகவோ, விடியோவாகவோ, அனுப்பலாம். இந்தப் புகார்கள் மீது தொழிலாளர் துறை அலுவலர்கள் உடன் நடவடிக்கை எடுப்பர்.
இந்தச் செயலியை பிளே ஸ்டோர் மூலம் TN-LMCTS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சி. சுரேஷ், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெ. ரத்தினவேல், தொழிலாளர் ஆய்வாளர் ப. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...