Pages

Saturday, July 8, 2017

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் இலவச வைபை சேவை அதிகரிப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 08
அமெரிக்கா தடங்களில் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்களை மீண்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து உலகின் அனைத்து தடங்களில் செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் வழங்கப்படும் இலவச வைபை சேவையின் அளவு பிளாட்டினம் மற்றும் கோல்டு கிளாஸ் மெம்பர்களுக்கு (முதல் வகுப்பு மற்றும் பிஸ்னஸ் வகுப்பு) அன்லிமிடட் டாட்டா (Unlimited Data) சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எகனாமி வகுப்பு பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும் 10MB டாட்டா 20MB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை எகனாமி வகுப்பு பயணிகள் விமானம் புறப்பட்ட 2 மணிநேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், 150MB முதல் 200MB வரை கூடுதல் டாட்டாவை (DATA) கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றாலும் சில்வர் மற்றும் புளூ வகுப்பு பயணிகளுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். தற்போது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் 200க்கு மேற்பட்ட விமானங்களில் வைபை வசதி செய்யப்பட்டுள்ளன என்றும் இவ்விலவச சலுகையை இயன்றவரை இலவசமாக அடிக்கடி பயணம் (Frequent Flyers) செய்யும் எமிரேட்ஸ் பயணிகளுக்கு வழங்குவது தமது நோக்கங்களில் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...