Pages

Monday, July 3, 2017

அமெரிக்கா செல்லும் எதிஹாத் விமானங்களில் லேப்டாப்களை மீண்டும் கொண்டு செல்ல அனுமதி !

அதிரை நியூஸ்: ஜூலை 03
சில மாதங்களுக்கு முன் அமீரகம் உட்பட சில அரபு நாடுகளிலிருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தங்களுடன் லேப்டாப்புகள், டேப்லட்டுகள் மற்றும் இதர மின்சாதனப் பொருட்களை விமானங்களில் தங்களுடன் எடுத்துச் செல்ல அமெரிக்க அரசு தடை விதித்தது. இந்தத் தடையால் பாதிக்கப்பட்ட 280 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 180 விமான நிறுவனங்களில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எதிஹாத் விமான நிறுவனமும் ஒன்றாகும்.

அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கான உடைமை பரிசோதனைகள், அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் இமிக்கிரேசன் நடைமுறைகள் அனைத்தும் அபுதாபி விமான நிலையத்திலேயே மிக கவனமுடன் செய்து முடிப்பதால் பயணிகள் அனைவரும் அமெரிக்க விமான நிலையங்களில் இறங்கிய பின் நீண்ட வரிசைகளில் காத்திராமல் உள்நாட்டு பயணியைப் போல் உடனடியாக வெளியேறிவிடலாம், இந்த வசதி மத்திய கிழக்கு நாடுகளிலேயே அபுதாபியில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிஹாத் விமான நிறுவனம் அபுதாபியிலிருந்து நியூயார்க், வாஷிங்டன், டல்லஸ், சான் பிரான்ஸிஸ்கோ, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய அமெரிக்காவின் 6 நகரங்களுக்கு வாரத்திற்கு 45 சேவைகளை சேவை வழங்கி வந்த நிலையில் பெரிய மின்சாதனப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...