Pages

Saturday, July 8, 2017

துபாய் நயிஃப் ரோடு பராமரிப்பு பணிகளுக்காக சாலை போக்குவரத்து மூடப்பட்டது !

அதிரை நியூஸ்: ஜூலை 08
துபையின் நெரிசலான போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நாயிஃப் சாலையும் ஒன்று. இந்த சாலையில் மட்டும் தினமும் சராசரியாக 13,000 பஸ் பயணிகள் என மாதம் ஒன்றுக்கு சராசரியாக 394,000 பயணிகள் பயணிக்கின்றனர். இந்த நாயிஃப் சாலையை பராமரிப்பு பணிகளுக்காக சுமார் 1 மாத காலத்திற்கு போக்குவரத்திற்கு மூட திட்டமிடப்பட்டுள்ளதால் நாயிஃப் ஜங்ஷன்-2 மற்றும் புரூஜ் நஹர்-2 ஆகிய பஸ் ஸ்டாப்களை பயணிகள் உபயோகப்படுத்த முடியாது.

இந்த சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் பயணாளிகளின் நலனை கருத்திற்கு கொண்டு தற்காலிகமாக புதிய சுற்றுப்பேருந்துகள் விடப்படவுள்ளன. இன்று முதல் இந்தப் பேருந்துகள் 15 நிமிடத்திற்கு ஒருமுறை என நாள் முழுவதும் சுற்றி வந்து சேவை வழங்கும். மெட்ரோ யூனியன் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த சுற்றுப்பேருந்துகள் நாயிஃப் பார்க், நாயிஃப் ஜங்ஷன்-1, புரூஜ் நஹர்-1, அல் நகல் வழியாக மீண்டும் மெட்ரோ யூனியன் ஸ்டேஷனை வந்தடையும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...