Pages

Wednesday, July 12, 2017

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் தற்போது பழைய குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில், குடும்பத் தலைவரின் புகைப்படம் சரியாக இல்லாத குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் அச்சிட இயலாமல் உள்ளது.

எனவே, குடும்பத் தலைவரின் புகைப்படத்தினை ஒப்படைத்திடக் கோரி நியாயவிலை அங்காடிகளில் வைக்கப்பட்டுள்ள பட்டியலில் கண்டுள்ள குடும்ப அட்டைகளுக்குரிய புகைப்படங்களை இணையத்தின் மூலம் பதிவேற்றம் செய்திடவேண்டியுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலை அங்காடிகளிலும் குடும்பத் தலைவரின் புகைப்படம் பெறும் சிறப்பு முகாம்  13.07.2017 அன்று நடைபெற உள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, குடும்பத் தலைவரின் புகைப்படத்தினை அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் நியாயவிலை அங்காடியின் விற்பனையாளரிடம் தவறாது ஒப்படைத்து தங்களது ஸ்மார்ட் குடும்பஅட்டைகளைவிரைந்துஅச்சிட்டுப் வழங்கிடுவதற்கு ஒத்துழைக்குமாறு குடும்ப அட்டைதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகம் இன்று ( புதன்கிழமை ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...