Pages

Thursday, July 6, 2017

அபுதாபியில் பார்க்கிங் இன்ஸ்பெக்டர்களுக்கு பதிலாக கண்காணிப்பு கேமிராக்கள் !

அதிரை நியூஸ்: ஜூலை 06
துபை, ஷார்ஜா, அபுதாபி போன்ற எமிரேட்டுகளில் வாகனங்களில் பார்க்கிங் டிக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்கவும், தவறியவர்களுக்கு அபராத சீட்டுகளை விநியோகிக்கவும் பார்க்கிங் இன்ஸ்பெக்டர் (Parking Inspectors)என்ற ஆய்வாளர்கள் கமிஷன் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றனர்.

தற்போது இத்தகைய பார்க்கிங் இன்ஸ்பெக்டர்களுக்கு பதிலாக தானியங்கி கண்காணிப்பு கேமிராக்களை கொண்டு பார்க்கிங் டிக்கெட் பரிசோதனை நடத்தவும், பார்க்கிங் டிக்கெட் வைக்கத் தவறியவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே அபராதம் குறித்த செய்திகளை அனுப்பவும் அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Abudhabi Integrated Transport Center - ITC) தீர்மானித்துள்ளது.

ஆரம்பமாக முஸஃபா, முஹமது பின் ஜாயித் சிட்டி, அபுதாபியின் புறநகர் (Downtown Abudhabi) பகுதிகளில் இத்தகைய கண்காணிப்பு கேமிராக்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை ஸ்டேன்டர்டு பார்க்கிங் (Standard Parking) பகுதிகளில் மணிக்கு 2 திர்ஹமும், பிரீமியம் பார்க்கிங் (Premium Parking) பகுதிகளில் மணிக்கு 3 திர்ஹம் அதிகப்பட்சம் 4 மணிநேரம் வரை வாகனத்தை நிறுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.

குடியிருப்புப் பகுதிகளில் குடும்பத்தின் முதலாவது வாகனத்திற்கு வருடத்திற்கு 800 திர்ஹம் என்ற கட்டணத்திற்கு மேல் வேறு கூடுதல் கட்டணமின்றி ஏதுமின்றி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். 2வது வாகனத்திற்கு 1200 திர்ஹம் கட்டணமாகும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...