Pages

Tuesday, July 4, 2017

துபாய் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் வேகம் குறைக்கப்பட்டதா ? குழப்பத்திற்கு துபை போலீஸ் விளக்கம்

அதிரை நியூஸ்: ஜூலை 04
துபை ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் முன்பு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த 100 கி.மீ வேகத்திலிருந்து 80 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்ததை தொடர்ந்து துபை போலீஸ் அதுபற்றிய தெளிவை வழங்கியுள்ளது.

துபை ஷேக் ஜாயித் ரோட்டில் அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 100 கி.மீ மற்றும் கூடுதல் கருணை வேகமான மணிக்கு 20 கி.மீ (மொத்தமாக மணிக்கு 120 கி.மீ) என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மணிக்கு 121 கி.மீ எனும் அளவை வாகனங்கள் எட்டும் போது ரேடார் காமிராக்கள் வழமைபோல் இயங்கும் என்றும், அபுதாபியை எல்லை தொட்ட பின்பு மணிக்கு 120 கி.மீ மற்றும் கூடுதல் கருணை வேகமான மணிக்கு 140 கி.மீ என்ற வேகத்தில் வாகனத்தை செலுத்தலாம் என்றும், 141 கி.மீ எனும் வேகத்தை வாகனங்கள் எட்டும் போது ரேடார் கேமிராக்களில் சிக்கி அபராதம் செலுத்துவது நிச்சயம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

குழப்பத்திற்கு காரணம் இதுதான்:
நேற்று உம்மல் குவைன் போலீஸார் உம்மல் குவைன் (UAQ) முதல் பலஜ் அல் முல்லா (Falaj Al Mulla) வரையுள்ள ஷேக் ஜாயித் பின் சுல்தான் என்ற சாலையில் வாகனங்கள் செல்வதற்கே புதிய வேகக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் இருபுற சாலையிலும் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த மணிக்கு 100 கி.மீ என்ற வேக அளவிலிருந்து மணிக்கு 80 கி.மீ என்ற குறைக்கப்பட்ட வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும்.

துபையிலுள்ள ஷேக் ஜாயித் ரோடு வேறு. உம்மல் குவைனில் உள்ள ஷேக் ஜாயித் பின் சுல்தான் ரோடு வேறு என புரிந்து கொண்டால் குழப்பம் ஓவர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...