Pages

Thursday, August 3, 2017

ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' நகரமாகும் தஞ்சாவூர் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவ10ர் மாநகராட்சி சீர்மிகு நகரமாக (SMART CITY) மாற்றவது தொடர்பாக துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (03.08.2017) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ஒரு மாத காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  சுற்றுலா தகவல் மையம், உள்ளுர் வரைபடம், வழிகாட்டி புத்தகம், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுதல், குடிநீர் வசதிகள் மேம்படுத்துதல், வணிக வளாகம், அமைத்தல், சாலை வசதியை மேம்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் தொடர்பான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் நகரம் பழமை மாறாமல் மேம்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் மு.வரதராஜ், நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் சரவணன், சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், தன்னார்வ தொண்டு நிறுவனம் ரோட்டரி சங்கம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...