Pages

Monday, August 14, 2017

காதிர் முகைதீன் பள்ளி 120 புள்ளிகள் பெற்று மாவட்ட அளவில் சாதனை: மாணவர்களுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.14
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 120 புள்ளிகள் பெற்று சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளித் தாளாளர் எஸ்.ஜே அபுல் ஹசன் சுழற்கோப்பை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 108 பள்ளிகளுக்கு இடையேயான சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் தடகளப் போட்டிகள் ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், மும்முறை தாண்டுதல், தடை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு 120 புள்ளிகள் பெற்று பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

அதே போல், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 108 பள்ளிகளுக்கு இடையேயான சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் மாவட்ட கால்பந்து போட்டி, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த கால்பந்தாட்ட போட்டிகளில் முதல் இடம் பிடித்து மண்டலளவில் நடைபெறும் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இதையடுத்து, வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு சுழற்கோப்பை
மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தடகளப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்கள் எஸ்.சேக்தாவூது, ஏ.அன்வர், என்.நூர்தீன், ஏ.முஹம்மது ஆபித், கே.ஜாவித், எம்.முரளிதரன், எம்.சல்மான் பக்கீர், ஏ.அஜ்மல்கான், என். நஜ்முதீன், பி.முத்தரசு, ஜே. ஆதில் அகமது, பி.ஆஷிக் அகமது, எச். பயாஸ் அகமது, ஏ.சிமர், ஆர். ரஞ்சித் ஆகியோரும், கால்பந்தாட்டப் போட்டியில் மண்டலப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் அஸ்ரப் அலி, உதவித் தலைமை ஆசிரியர்கள் நாகராஜன், வேணுகோபாலன், முதுகலை ஆசிரியர்கள் ஏ.மஹபூப் அலி, அஜுமுதீன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, ஜெயகாந்தன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...