Pages

Saturday, August 26, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்களை முன்வைத்து ஆதரவு கோரும் ஏ.ஜே ஜியாவுதீன் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், ஆக. 26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வலர்' ஏ.ஜே ஜியாவூதீன் விருப்ப மனுவை சனிக்கிழமை மாலை தாக்கல் செய்தார்.

போட்டியில் வெற்றி பெற்றால் கீழ்கண்ட செயல் திட்டங்கள் நிறைவேற்றும் பணியில் ஈடுபடுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

செயல் திட்டங்கள்:
1. திருமண பதிவு ஒப்பந்தம் செய்யப்படும் போது வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ கூடாது, என்பதனை மார்க்க ரீதியாக வலியுறுத்தப்படும்.

2. கணவன் மனைவி பிரச்சனையில் உளவு ரீதியாக, தர்க்க ரீதியாக, மார்க்க வரையறுக்கப்பட்ட நியதியை, அவர்களின் பிரிவை தவிர்க்கும் விதமாக ஒன்றாக சேர்ந்துவாழ வழி வகை செய்யப்படும்.

3. பெண்கள் மார்க்க கல்வி, உலக கல்வி மற்றும் பெண்கள் மதரஸா கட்டிடங்கள் மேம்படுத்த அதிக முக்கியத்துவத்தை வலியுறுத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

4. சுற்று சூழல் மற்றும் குளம் நீர்நிலைகளை பாதுகாக்க முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இருப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

5. திருட்டு மற்றும் வெளிநாட்டுவாழ் சகோதரர்களின் அக்கரையின்பால் வழிகேடர்கள் வருவதை கண்காணிக்க தெருவுக்கு தெரு  கேமராக்கள் பொறுத்தப்பட்டு அதில் மூன்று நபர்கள் பணிக்கு அமர்த்தி, தவறுகள் நடந்தால் சங்கம் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

6. மாதம் ஒருமுறை மருத்துவ முகாம். சிறந்த மருத்துவர் மற்றும் சிறந்த மருத்துவமனையை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்

7. மாதம் ஒருமுறை,அனைத்து பள்ளி இமாமாம்கள் மற்றும் மார்க்க கல்வி உஸ்தாத்மார்களுக்கு கூட்டம் எற்பாடு செய்து,அவர்களுக்கு முழு உரிமை தருவதற்கு அவர்களுக்கான சட்டமைப்பு கருத்தியல் கலந்தாய்வு நடைபெறும்.

8. அடிப்படை தேவை, அவசர தேவை .....நமது சங்க சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் துரித கடன் உதவி செய்யப்படும்.

9. வருடம் ஒருமுறை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ,குர்ஆன் மனனப்போட்டி ,கிராத் போட்டி ,பாங்கு போட்டி,ஆங்கிலத்தில் பேசும் போட்டி, அரேபிய மொழியில் எழுதும் போட்டி நடத்தப்பட்டு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும்.

10. வக்ப் சொத்துக்கள் மற்றும் பள்ளிவாசல்களின் பிரச்சனைகளை களைய, அதிரடி நடவடிக்கை எடுக்க இச்சங்கம் பாடுபடும்.

11. வெள்ளிக்கிழமை குத்பா. நேரங்களில் கூட கடை அடைக்காமல் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை கண்டறிந்து, அந்நேரத்தில் கடையை அடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. கட்டுமானத்தொழிலில் ,வடநாட்டு தொழிலாளளர்கள், வேலை செய்பவர்களுக்கு சில விதியின் படியே வேலை வாங்க, கட்டுமான பிரமுககர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

13. நம் எல்லைக்குட்பட்ட நீர், கரண்ட் ,தார் சாலை, பிரச்சினைகள், புகார் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துசென்று, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

14. சமூக ஆர்வலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும்.

15.. பால் விநியோகம் செய்து வரும் பால்காரர்கள், வெளியூர்களிலிருந்து பொருள்களை வீடுகளுக்கு விற்பனை செய்ய வரும் நபர்கள், வீடு வீடாக வசூலிக்க வரும் நபர்களை கண்காணித்து சங்க நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படும்.

17.சீரழிந்து வரும் நம் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு , உலமாக்கள் மூலமாக தஃவா பணி கொடுக்க, அப்பிள்ளைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சரி செய்ய குழு அமைக்கப்படும்.

18.நோன்பு காலங்களில் சிறப்பு பயான், ஆண் மற்றும் பெண்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

19.ஹஜ்ஜூக்கு செல்லும் (ஹாஜிகள்) பதிவு செய்த ஆண்கள் மட்டும் ஒன்றிணைத்து அரபா என பெயரிட்டு சிறப்பு பயான் செக்கடிப்பள்ளியில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

20. SHISWA என்கிற தன்னார்வ அழகிய உள்ளங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

21. ஊர் ஆலிம்கள், மருத்துவர்கள் (மாவட்ட) இஸ்லாமிய வழக்கறிஞர்கள் ,கல்லூரி பேராசிரியர்கள் அனைவர்களுக்கும்  அழைப்பு கொடுக்கப்பட்டு , மக்கள் நலன்  சங்க நலன் விவாதிக்கப்படும்.

22. மக்களின் பொதுப் பிரசினைகளை தீர்க்க முன்னிருந்து .......
பேரூராட்சி , அரசு சார்ந்த அலுவலகங்களின் மக்கள் உரிமைகளை மீட்டெடுக்க இச்சங்கம் தலையிடும்

23. இளைஞர்கள் படித்த, படிப்புக்கு ஏற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

24. சங்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டிகாரகள் முழுவதும் தடை செய்யப்படுவார்கள்.

இத்திட்டங்கள், செயல்பாடுகள் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில், கலந்தாய்வு செய்து மசூராவின் அடிப்படையிலேயே செயல்பாட்டுக்கு வரும்.ஷம்சுல் இஸ்லாம் சங்கம் என்றுமே தீர்வு தரும். இன்ஷாஅல்லாஹ்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...