Pages

Thursday, August 10, 2017

பட்டுக்கோட்டையில் 2 மாதத்தில் இடிந்த ரயில்நிலைய தடுப்புச் சுவர்: ஆய்வு செய்ய கோரிக்கை !

பட்டுக்கோட்டை, ஆக.10
பட்டுக்கோட்டையில் கட்டி முடித்து 2 மாதங்களேயான நிலையில் ரயில்நிலைய தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

பட்டுக்கோட்டையில் புதிதாக ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்த ரயில் நிலைய வளாகத்திலுள்ள ரயில்வே அதிகாரிகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள முகாம் அலுவலகம் எதிரில் வடிகால் வாய்க்காலின் மேல்புறம் சுமார் 50 அடி நீளம், 5 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த தடுப்புச்சுவர் கடந்த சில நாள்களுக்கு முன் பட்டுக்கோட்டையில் இரவு நேரத்தில் 1 மணி நேரம் பெய்த மழையில் அடியோடு இடிந்து விழுந்து விட்டது. இதனால் வடிகால் வாய்க்காலும் தூர்ந்து கிடக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: 
1 நாள் மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாமல் 2 மாதத்துக்கு முன் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. முறையான திட்டமிடல் இல்லாததும், மோசமான கட்டுமானப் பணியுமே இதற்கு காரணம். இதனால் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இதர கட்டுமானப் பணிகள் குறித்தும் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்து வரவுள்ள தொடர் மழை காலத்தில் புதிய கட்டுமானப் பணிகளில் சேதம் ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, பட்டுக்கோட்டை புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகளின் உறுதித்தன்மையை ரயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...