Pages

Sunday, August 6, 2017

அதிரையில் 4 மையங்களில் 848 பேர் குரூப்-2 ஏ தேர்வு எழுதினர் !

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், ஆக.06
1,953 காலிப் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வை, இன்று 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.

தமிழக அரசின் 41 துறைகளில் 1953 காலியிடங்களை நிரப்புவதற்காக குருப்-2ஏ-தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.

பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக கொண்ட இப்பணிக்கு நேர்முகத் தேர்வு இல்லாமல் எழுத்துத்தேர்வு அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 7 லட்சத்து 52 ஆயிரத்து 916 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தபடி, எழுத்துத்தேர்வு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இதில், தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் மொத்தம் 24,451 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 18, 126 பேர் தேர்வு எழுதினர். ( 74.13 % )

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் மொத்தம் 3231 பேர் தேர்வு எழுதினர் ( 72.46 % ). இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி (227 பேர்), காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (203 பேர்), காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (213 பேர்), இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி (205 பேர்) ஆகிய 4 தேர்வு மையங்களில் மொத்தம் 848 பேர் தேர்வு எழுதினர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...