Pages

Tuesday, August 8, 2017

கால்பந்தாட்ட போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி 5 ம் ஆண்டாக சாதனை !

அதிராம்பட்டினம், ஆக-08
பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 108 பள்ளிகளுக்கு இடையேயான சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் மாவட்ட கால்பந்து போட்டி, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, சூப்பர் சீனியர், சீனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த கால்பந்தாட்ட போட்டிகளில் முதல் இடம் பிடித்து மண்டலளவில் நடைபெறும் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இதையடுத்து, கால்பந்தாட்ட போட்டிகளில் 5 ஆம் ஆண்டாக சாதனை நிகழ்த்திய மாணவர்களை பள்ளித்தாளாளர் எஸ்.ஜே அபுல் ஹசன், பள்ளி தலைமை ஆசிரியர் அசரப் அலி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயகாந்தன், ராஜா மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...