Pages

Tuesday, August 1, 2017

வெளிநாடுவாழ் இந்தியர்களின் சமூக நல நிதியை மேலும் பல திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதி!

அதிரை நியூஸ்: ஆக. 01
இது இந்திய அரசு ஓதுக்கும் நிதியல்ல மாறாக அரசால் தூதரகங்கள் வழியாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து வசூலித்து சில பாரதூரமான துன்பியல் சூழலில் சிக்கித் தவிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் இந்த 'சமூக நல நிதி'. Indian Community Welfare Fund (ICWF) சுருக்கமாக இதுவும் ஓர் 'நமக்கு நாமே திட்டம்'

வெளிநாடுவாழ் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருமுறை பாஸ்போர்ட் புதுப்பித்தல், அபிடவிட் வேண்டுதல் போன்ற பல பணிகளுக்காக இந்திய தூதரகம், கவுன்சலேட்டுகள் மற்றும் அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகளை அணுகும்போது சேவைக்கட்டணத்துடன் சேர்த்து இந்த நிதியையும் வசூலித்து விடுவார்கள். மேலும் சில பொழுதுகள் நன்கொடைகள் பெற்றும் இந்நிதியில் சேர்க்கப்படும்.

2012 ஆம் ஆண்டு வரை இந்த வகையில், அமீரகத்தில் மட்டும் சேர்ந்த தொகை சுமார் 15.35 மில்லியன் திர்ஹமாகும் இவற்றில் செலவான தொகை சுமார் 4.95 மில்லியன் திர்ஹம் மட்டுமே. எஞ்சியவை சேமிப்பாக வைக்கப்படும் 2012 ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை வசூலானது எவ்வளவு, செலவு செய்யப்பட்டவை எவ்வளவு என்ற கணக்கு இதுவரை வெளியாகவில்லை.

இந்தத் சமூக நல நிதியை கொண்டு பொதுவாக நிர்க்கதியாய் நிற்கும் வீட்டுப் பணியாளர்கள் நாட்டிற்குச் செல்ல உதவுதல், நாதியற்ற இந்தியர்களின் சடலங்களை அனுப்புதல், அமீரகத்தில் உள்ள இந்திய சமூக நல ஊழியர்களுக்கான தினசரி செலவுகள், தொழிலாளர்களின் தகுதியான வழக்குகளின் ஆரம்பகட்ட சட்ட ஆலோசணைகள் வழங்குதல் தொடர்பான செலவுகள் மற்றும் இந்திய தொழிலாளர் வள மையங்களை நிர்வகித்தல் போன்றவற்றிற்காக செலவிடப்படுகின்றது.

இந்த சமூக நல நிதியை கொண்டு வன்முறை மற்றும் போர் சூழலால் பாதிக்கப்பட்ட நாடுகளான ஏமன், லிபியா, ஈராக், தெற்கு சூடான் போன்ற நாடுகளிலிருந்தும், 2013 சவுதியில் கொண்டு வரப்பட்ட நிதாகாத் சட்டங்களால் பாதிக்கப்பட்டும் முறையான ஆவணங்கள் இல்லாததால் தவித்த இந்தியர்கள் பலரை வெளியேற்றவும், சமீபத்தில் நிறைவடைந்த பொது மன்னிப்பு காலத்திலும் இந்தியர்களை வெளியேற்ற அமீரக சமூக நல நிதி சேமிப்பிலிருந்து ஒரு பகுதி தொகை மடைமாற்றப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு திரு வயலார் ரவி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இந்தத் சமூக நல நிதியிலிருந்து அமீரகத்தில் இறுதிச்சடங்கு வளாகம் (crematorium) ஒன்றை ஏற்படுத்தவும், 2 சமூக நல மையங்களை (2 community centres in the UAE) ஏற்படுத்தவும் அனுமதியளித்திருந்தார்.

கடந்த வாரம் கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தின் முடிவில் இந்த சமூக நல நிதியை வெளிநாடுவாழ் இந்தியர்களின் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், முன்பு போல் ஒவ்வொரு தேவைக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற தேவையில்லை எனவும், இந்திய தூதரக அதிகாரிகளே தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்து சமூக நல நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.

என்னென்ன வகையாக கூடுதல் புதிய திட்டங்களுக்கு சமூக நல நிதியை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் வழிகாட்டல் சுற்றறிக்கை வந்தப்பின் தான் இதுகுறித்த கூடுதல் விபரங்களை தர முடியும் என துபையிலுள்ள கவுன்சலர் திரு. விபுல் அவர்கள் தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...