Pages

Friday, August 11, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் போட்டித்தேர்வு விழிப்புணர்வு கருத்தரங்கம் !

அதிராம்பட்டினம், ஆக.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, பட்டுக்கோட்டை ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி மையம் ஆகியன இணைந்து போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரி வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் வரவேற்றார். பேராசிரியர் எஸ்.பி கணபதி, பட்டுக்கோட்டை ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி கன்வினர் ரஹ்மத்துல்லாஹ் கருத்துரை வழங்கினார். மேலும் கருத்தரங்கில் மாணவ மாணவிகளுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற தேவையான வழிமுறைகள் குறித்து பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...