Pages

Saturday, August 12, 2017

சவூதி ஜித்தாவில் அய்டா முன்னாள் - இந்நாள் நிர்வாகிகளுக்கு பிரிவுபச்சார விழா (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.12
சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள அய்டா அமைப்பின் தலைவர் ரஃபியா மற்றும் முன்னாள் நிர்வாகி உ.க.ஜஃபருல்லாஹ் ஆகியோருக்கு பணி மூப்பு காரணமாக இந்தியா திரும்புவதை அடுத்து அவர்களுக்கு அய்டா சார்பில் பிரிவுபச்சார விழா நடைபெற்றது.

சவூதி அரேபிய ஜித்தாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து பணி மூப்பு காரணமாக ஓய்வு பெறுவதை அடுத்து இந்தியா திரும்பவுள்ளார். மேலும் உ.க. ஜஃபருல்லாஹ் அவர்களும் 35 ஆண்டுகாலமாக சவூதியில் பணிபுரிந்து ஓய்வு பெறுகிறார். இவர்களுக்கு அய்டா அமைப்பு சார்பில் பிரிவுபச்சார விழா ஜித்தா லக்கி தர்பார் உணவக ஆடிட்டோரியத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில் அய்டாவின் செயலாளர் சம்சுதீன் , பொருளாளர் அப்துல் அஜீஸ், இணை பொருளாளர் அபூபக்கர் மற்றும் இணை செயலாளர் மீராசா ரஃபியா, ஜெய்லானி, இன்னும் பல உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அய்டாவின் இணை தலைவர் ஏ.ஜே.தாஜுத்தீன் விடுமுறையில் ஊர் சென்றுள்ள நிலையில் அவர் அனுப்பிய ஆடியோ மெஸேஜ் வாழ்த்துரை ஒலிபரப்பப்பட்டது.

அய்டாவின் ஆலோசகர் ஜஃபருல்லாஹ் வாழ்த்துக் கவிதை படித்தார். இறுதியில் ரஃபியா அஹமது அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள் இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.  விழாவில் அய்டா உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...