Pages

Monday, August 14, 2017

அதிரையில் தொடர் மழையால் மீனவ குடிசைப் பகுதிகள் நீரில் மூழ்கியது: நீரை வெளியேற்ற மீனவ சங்க நிர்வாகி கோரிக்கை !

அதிராம்பட்டினம், ஆக. 14
அதிராம்பட்டினத்தில் இரவில் தொடர் மழையால் ரயில்வே பாதையையொட்டி அமைந்துள்ள காந்தி நகர், கரையூர் தெரு மீனவ குடிசைப் பகுதிகள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளில் தேங்கி காணப்படும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஏஐடியூசி சங்க மாவட்டச் செயலர் என்.காளிதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் ரயில்வே பாதையையொட்டி அமைந்துள்ள கடலோர மீனவ கிராமங்கள் காந்திநகர், கரையூர் தெரு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அடைப்பு உள்ள பகுதிகளை தூர் வாரி, ரயில்வே பாலம் வழியே மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியூசி சங்க மாவட்டச் செயலர் என்.காளிதாஸ் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஏஐடியூசி சங்க மாவட்டச் செயலர் என்.காளிதாஸ் கூறுகையில்;
அதிராம்பட்டினம் கடலோரப்பகுதி ரயில்வே பாதையையொட்டி சுமார் 100 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதியையொட்டி அமைந்துள்ள ரயில்வே பாதையில் மணல் நிரப்பும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இரவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிப்படைதுள்ளது. இப்பகுதியில் மழை நீர் தேங்கிக் காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் எண் 408 முதல் 409 வரை அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை தூர்வாரி, ரயில்வே பாலம் வழியே மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...