Pages

Monday, August 7, 2017

அதிரை பைத்துல்மால் குவைத் கிளை கூட்டத்தில் நலிவடைந்த அதிரை மக்களுக்கு உதவ முடிவு !

கூட்டத்தில் ஏபிஎம் குவைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் பேசுகிறார்

கடந்த 4/8/2017 வெள்ளியன்று குவைத் சால்மியாவில் நடைபெற்ற அதிரை பைத்துல்மால் மாதாந்திரக் கூட்டத்தில் குவைத்தில் வாழும் அதிரையர்கள் வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் தங்கள் ஒய்வு நேரத்தை ஒதுக்கி மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1. ஏற்கனவே முன்வைத்த ஆலோசனைகளில் 6ல் 2 திட்டங்களை உடனடியாக செயல்படுத்த சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டும்.

2. ஆலிம்கள் பிறரை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாறி சுய கவுரவுத்துடன் வாழ, நம்மூர் மதரஸாக்களில் ஓதிய ஆலிம்களுக்கும் மற்றும் ஓதிவரும் மாணவர்களுக்கும் மதரஸாவிலேயே கம்ப்யூட்டர் வகுப்புகள் எடுப்பது.

3.  அதிரையில் மிகவும் பின்தங்கிய பிலால் நகரில் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்குவது.

4.   மேலும்,புதியதாக ஒரு திட்டத்தை தலைவர் முன்வைத்து விவாதிக்கப்பட்டது. பிலால் நகரில் பல வீடுகளில் கழிவறைகள் இல்லாததால் பெண்கள் தங்கள் வெட்கஸ்தலங்களை காப்பது மற்றும் ஊர் தூய்மையாக இருப்பது என்பவை கேள்விக்குறியாக இருப்பதால், ஒரு வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டிக்கொடுப்பது.

மேல்குறிப்பிட்ட நலத்திட்டங்களில் குவைத் கிளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலுள்ள நம்மூர் சகோதரர்களும் பங்களிக்க முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

இது விஷயமாக சகோதரர் ஜெய்னுல் ஹுசைன் அவர்களை +965 99781286 எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...