Pages

Monday, August 14, 2017

தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் ( படங்கள் )

தஞ்சாவூர், ஆக. 14
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மற்றும் பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்  தடுப்பு மருந்து துறையின் சார்பில் விழிப்புணர்வு வாகனங்கள் மூலமாகவும் மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு டெங்கு நோய் மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு முன்னிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (14.08.2017) திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தும், விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டும், பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீரினை வழங்கியும், பொது மக்கள் மற்றும் பணியாளர்களுடன் சுகாதார உறுதிமொழியினை ஏற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;
ஏ.டி.எஸ்.கொசுவினை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாமினை தமிழகம் முழுவதும் மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது. டெங்கு நோயினை கட்டுப்படுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்;டு வருகின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 29 வகையான வைரஸ் காய்ச்சல் உள்ளது. இதில் காய்ச்சல் என வருபவர்களில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு அறிகுறிகள் காணப்பட்டாலும், 1 சதவீதம் பேர் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளவர்களை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட 43 பேரில் 2 பேருக்குதான் டெங்கு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருந்தால் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தி உள்ளோம். அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்துகள், ரத்தம் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு அறிகுறிகள் உள்ளன.   அது தற்போது இறங்குமுகமாக உள்ளது. பொது மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  டெங்கு காய்ச்சலை குணப்படுத்திவிடலாம். மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது அவர்கள் சிகிச்சை பெற தாமதம் ஏற்படுத்தினால் இறப்பு நேரிடலாம். எனவே அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பொழுது உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகளில் 30,000 சுகாதார மஸ்தூர் பணியாளர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள், 416 நடமாடும் குழுக்கள், 150 பள்ளி குழுக்கள் ஈடுபட்டுள்ளன.  இன்னும் 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.  இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்தார்.

பின்னர், இராசா மிராசுதார் மருத்துவமனையிலும், பேராவூரணி ஆரம்ப சுகாதார மருத்துவமனையிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்களர் அவர்களும், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்களும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், அறங்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ரத்னசபாபதி, பொது சுகாதாரம் மற்றம்நோய் தடுப்புத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, மருத்துவபணிகள் இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோஸ், மருந்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் டாக்டர் பானு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை கூடுதல் இயக்குநர்  டாக்டர் வடிவேல், ஒருங்கிணைந்த பால்வள கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், தலைமை பூச்சியியல் வல்லுநர் குமார், வருவாய் கோட்டாட்சியர் ம.கோவிந்தராசு, மாநகராட்சி ஆணையர் வரதராஜன், இணை இயக்குநர், சுகாதரத்துறை ஜெயசேகர சுப்ரமணியன், சுகாதாரப் பணிகள்  துணை இயக்குநர் சுப்ரமணியன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணிய மூர்த்தி, இயக்குநர் சரவணன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் குழ.சுந்தரராஜன், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...