Pages

Thursday, August 3, 2017

அமீரகத்தில் கடும் சூடும், மழையும் பெய்யும்: வானிலை அறிவிப்பு !

அதிரை நியூஸ்: ஆக.03
இந்த மாதம் அமீரகத்தில் கடும் சூடும், மழையும் பெய்யும் என அமீரகம் வானிலை மையம் அறிவித்துள்ளது.

அமீரக வானிலை மையம் அறிவித்துள்ளபடி, இந்த ஆகஸ்ட் மாதத்தில் அமீரகத்தின் பெரும்பகுதிகள் 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திலும், 85 சதவிகிதம் அதிகரித்துள்ள புழுக்கத்திலும் (வெக்கை) வெந்துபோகவுள்ள நிலையில் அமீரகத்தின் மஸாபி (Masafi), அல் மதாம் (Al Madam), பிலி (Fili) போன்ற பகுதிகளில் மழை பெய்யவுள்ளதாம்.

இந்தியாவில் பருவமழை காலம் துவங்கவுள்ளதால் தென்கிழக்குப் பகுதியில் தோன்றும் மழை மேகங்கள் காற்றால் அடித்து வரப்பட்டு இறுதியாக மேற்குறிப்பிட்ட அமீரக பகுதிகளில் மட்டும் மழையை பொழிவித்து செல்லுமாம். அதேவேளை ஷார்ஜா, துபை, அபுதாபி போன்ற நகரங்கள் இந்த மழையின் ஒரு துளியை கூடப்பெறாது சூட்டால் வாடி வதங்குமாம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அதிகரித்து காணப்படும் புழுக்கத்தால் மக்கள் யாரும் வெளிப்புறங்களில் இருப்பதை தவிர்த்து குறிப்பாக பகல் 2 முதல் மாலை 4 மணிவரை தரிப்பிடங்களின் உள்ளேயே இருக்குமாறும் அமீரக வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...