Pages

Monday, August 14, 2017

அதிராம்பட்டினத்தில் நாம் மனிதர் கட்சி அலுவலகம் திறப்பு - கொடியேற்றும் விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஆக.14
நாம் மனிதர் கட்சி அலுவலகம் திறப்பு, கொடியேற்றும் விழா அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.ஏ சரபுதீன் தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். தெளஃபிக் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து, அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் நாம் மனிதர் கட்சி மாநில சட்ட ஆலோசகர் நெப்போலியன், அரசியல் ஆலோசகர் தங்க. குமாரவேல், திருவாரூர் மாவட்டத் தலைவர் பி.எம் முஹம்மது சுலைமான், மாநில செயற்குழு உறுப்பினர் டி.பீர் முஹம்மது ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக நாம் மனிதர் கட்சி அதிராம்பட்டினம் செயலாளர் எம்.அபுல் ஹசன் வரவேற்று முடிவில் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நாம் மனிதர் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...