Pages

Saturday, August 5, 2017

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஆக. 05
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் இந்திய குழந்தைகள் நல சங்கம் இணைந்து தாய்ப்பால் வார விழா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. அன்பழகன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராணி அசோகன் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். விழாவையொட்டி 'தாய்ப்பால் முக்கியத்துவம்' குறித்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இதில் 75 பேர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற 10 பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆரோக்கியமான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு பிரட் பாக்கெட் வழங்கப்பட்டன.

விழாவில், தாய்ப்பாலின் அவசியம் குறித்து மருத்துவர்கள் வி. புகழேந்தி, ஹாஜா முகைதீன், எம்.அய்யாசாமி, சபா சுப்பிரமணியன், வி. காமராஜ், பாலகுமார் ஆகியோர் பேசினர். இவ்விழாவில் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...