Pages

Saturday, August 12, 2017

மதுக்கூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பத்திரப்பதிவு அறிமுகம் !

மதுக்கூர், ஆக.12
பத்திரப்பதிவு மாவட்டத்தில் உள்ள பத்திர எழுத்தர்கள், பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்தல் தொடர்பாக பயிற்சி வகுப்பு நடந்தது.

பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளர்கள் சாந்தி (நிர்வாகம்), லலிதா (தணிக்கை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சாவூர் மண்டல பதிவுத் துறை துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசுகையில்;
'பத்திரப்பதிவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக 41 சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் இந்த முறை அறிமுகம் செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் பதிவு மண்டலத்தில் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம், மதுக்கூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் பத்திரப்பதிவு நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.

பட்டுக்கோட்டை பதிவு மாவட்ட சார்பதிவாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இணையதளம் பத்திரப்பதிவு நடைமுறை குறித்து டி.சி.எஸ் பணியாளர்கள் சாரி, விநய் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...