Pages

Sunday, August 6, 2017

அதிரையில் டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 06
அதிராம்பட்டினம் ரயில்வே நிலையத்திற்கு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அடிக்கடி விபத்து நிகழும் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அகல ரயில் பாதை திட்டப்பணிக்காக கிராவல் மற்றும் மணல் கலவை நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிக்காக தஞ்சையில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினம் வந்துகொண்டிருந்தது. லாரி பட்டுக்கோட்டை சாலை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் அருகே வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்திற்கு வழிவிட ஒதுங்கிய போது அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வாகன ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமும் பள்ளி வாகனங்கள் உட்பட அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பட்டுக்கோட்டை சாலையில், அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதி முதல் புதுக்கோட்டை உள்ளூர் வளைவுப் பகுதி வரையில் அமைந்துள்ள சாலை மிகக்குரியதாகவும், சாலையின் இருபுறங்களில் அபாயகரமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இப்பகுதியில் கடக்கும் வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாற்றினர். இப்பகுதி சாலையை அகலப்படுத்தி, சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
 
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...