Pages

Monday, August 14, 2017

அதிராம்பட்டினத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சந்திப்பு - விழிப்புணர்வு பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 14
காவிரியை மீட்போம், மண்ணைக் காப்போம் என்ற முழக்கத்துடன் காவிரி டெல்டா விவசாயிகள் சந்திப்பு விழிப்புணர்வு பிரசார பயணம் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடந்த ஆக. ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

பிரசார நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்து, பேசுகையில்; 
தமிழகத்தின் நெற்களஞ்சியம் காவிரி டெல்டா பகுதி. இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறை எரிவாயு, கச்சா எடுக்கும் திட்டங்கள் போன்ற எந்த வளங்களையும் எடுக்க அனுமதிக்கமாட்டோம். காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கக் கோரி தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆக. 29-ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு வர்த்தகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

பிரசார நிகழ்ச்சியில், தமிழக அனைத்து விவசாய சங்க தஞ்சை மண்டலத் தலைவர் டி.பி.கே ராஜேந்திரன், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முஹம்மது முகைதீன், மாவட்டத் தலைவர் சாரா அகமது உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...