Pages

Tuesday, August 15, 2017

அதிரையில் பள்ளி மாணவ, மாணவிகளின் சுதந்திர தின அணிவகுப்பு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 71 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் ஜே. அமீன் நவாஸ்கான் மாணவர்களின் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வி ஆலோசகர் ஹாஜி முஹம்மது அன்சாரி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
மாணவ மாணவிகளின் சுதந்திர தின அணிவகுப்பு பள்ளியிலிருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது.

விழாவில், சுந்தந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற பேச்சு மற்றும் வினாடி வினாப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ பிலால், யூ. இப்ராஹீம், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
 
 
 
 
 
 

1 comment:

  1. நிலாவை பார்த்து குழந்தைக்கு சோறு ஊட்டினோம் இன்று நிலாவை தாண்டி சாதனைப்படைக்கிறோம் ., அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...