Pages

Thursday, August 3, 2017

அதிரை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 03
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய குழந்தைகள் நல சங்கம் இணைந்து தாய்ப்பால் வார விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்க ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. அன்பழகன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன் ஜெயசேகர் கலந்துகொண்டு தாய்மார்கள் பாலுட்டும் தனி அறையை திறந்து வைத்து பேசுகையில்; தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவாக தாய்ப்பால் விளங்குகிறது. தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்க வேண்டும்' என்றார்.

விழாவில், தாய்ப்பாலின் அவசியம் குறித்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கெளசல்யா, ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், ஷெரின் ஆகியோர் பேசினர்.

விழாவையொட்டி 'தாய்ப்பால் முக்கியத்துவம்' குறித்து கேள்வி - பதில் போட்டி நடைபெற்றது. இதில் 15 பேர் கலந்துகொண்டனர். போட்டி முடிவில் வெற்றிபெற்ற 3 பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், நோயாளிகளுக்கு பிரட் பாக்கெட் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...